கும்பகோணத்தில் மகாமக குளத்தில் வெகுச்சிறப்பாக மாசிமக திருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசி மக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதே போல் இவ்விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகவும் வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டின் மாசிமகவிழாவை முன்னிட்டு கடந்த பிப்.28ந்தேதி முதல் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் ஆகிய 6 சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. அதே போல் பாணபுரீஸ்வரர், கம்பட்ட […]
திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயணபெருமாள் பிரமோத்ஸவம் நிறைவாக நள தீா்த்தக் குளத்துக்கு ரதத்தில் பெருமாள் எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெற்றது. திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலை சோ்ந்த ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது.இக்கோவிலுக்கு அதிகளவில் பக்தர் செல்வது வழக்கம்.மேலும் இக்கோவிலில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட ஏராளமான பக்தா்கள் வருகை தருகின்றனா்.இந்நிலையில் நேற்று(சனிக்கிழமை) காலை ரதத்தில் பெருமாள் நளதீா்த்தக் குளத்துக்கு எழுந்தருளினார் அங்கு சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. இதற்கு முன்னதாக கோயிலில் கொடியிறக்கம் […]