திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்டமானது இன்று (15.03.2022) காலை 8.10 மணியளவில் வடம்பிடித்து தொடங்கி வைக்கப்படுகிறது.96 அடி உயரம், 300 டன் எடையுடன் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் அலங்கரிக்கப்படுகிறது. இத்தேரோடத்தினையொட்டி துறைவாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி காவல்துறை பொருத்தமட்டில் 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,14 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 47 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நகராட்சி சார்பில் 270 பணியாளர்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளனர்.பொது மக்கள் […]