தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 10 மணி முதல் தொடங்கிய மழை மாலை வரை விட்டு விட்டு பெய்து வந்தது. தொடர்மழை காரணமாக மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்தது. அதே சமயம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கனமழை காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ராஜசேகர் […]
புயல் எச்சரிக்கை காரணமாக நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. மாண்டஸ் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே வேலூர், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கும் நாளை ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனையின்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி இருந்தார்.
திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தலைமையில் இன்று திருவாரூர் சன்னாநல்லூர் உட்பட 3 இடங்களிலும், நாகையில் 2 இடங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை தென்னக ரயில்வே புறக்கணிப்பதாகவும், குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ரயில் நிற்காமல் செல்கிறது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருவாரூர் , நாகை மாவட்டங்களில் விரைவுரயில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட 32 கோரிக்கைகளை முன்வைத்து, இன்று திருவாரூர் சன்னாநல்லூர் உட்பட […]
கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், அசாருதீன் , இடியாஸ், சாஜித், ரிஸ்வான் ஆகியோர் வீடுகளில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்று கிழமை கோவை உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அவரது வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களின் சோதனை செய்து 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அடுத்ததாக, அவருக்கு உதவியதாக, முபின் உடன் தொடர்பில் இருந்ததாக […]
அரசு நிர்ணயித்த ஈரப்பத அளவுக்கு கொண்டு வர நெற்பயிரை சாலைகளில் கொட்டி காயவைத்துள்ளார் திருவாரூர் பகுதி விவசாயிகள். ஆனால், திடீரென்று பெய்த மழையால் மேலும் ஈரப்பதம் கூடி விட்டது என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் தற்போது அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் நிலையங்களில் கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். அறுவடை செய்த நேரத்தில் மழை பெய்து வரும் காரணத்தால் அரசு நிர்ணயித்துள்ள 17 சதவீத அதிகபட்ச ஈரப்பத அளவுக்கு […]
கத்தாரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ராஜகோபாலன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் ராஜகோபாலன் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர். வெளிநாட்டு வேலை என்று சென்று அங்கு எதோ சில காரணங்களால் உயிரிழக்கும் தமிழர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அண்மையில் தான் குவைத் நாட்டில் கொல்லப்பட்ட முத்துக்குமார் உடல் தமிழகத்திற்கு வந்து சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது, கத்தார் நாட்டில் தமிழக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் […]
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 15 ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாயன்மார்களால் பாடப் பெற்ற தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில், தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் சிறப்பு நிகழ்வான ஆழித்தேரோட்டம் வருகின்ற மார்ச் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த […]
திருவாரூர் மாவட்டத்தில் 146 பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவு அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு. நேற்று நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், மாவட்டத்தோறும் அங்கு இருக்க […]
திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 15-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 15-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அந்த விடுமுறை நாளை சரிசெய்யும் பொருட்டாக அடுத்த மாதம் 8-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாவட்டங்களில் கனமழை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனையடுத்து, மயிலாடுதுறை,தேனி, திண்டுக்கல்,விருதுநகர்,தென்காசி, திருநெல்வேலி,தூத்துக்குடி, தஞ்சாவூர்,அரியலூர்,பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, கடலூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய […]
மழை காரணமாக கீழ்க்கண்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில்,வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளதன் காரணமாக இன்று (நவம்பர் 25 ஆம் தேதி) முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழை […]
திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளதன் காரணமாக இன்று (நவம்பர் 25 ஆம் தேதி) முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக […]
காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டே சென்று கிணற்றில் விழுந்த இளைஞர் மறுநாள் மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிக் என்ற இளைஞர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் தங்கி வேலைப் பார்த்து வருகிறார்.பணி முடிந்த பின் இரவு நேரங்களில்,தான் பணிபரியும் நூற்பாலை அருகில் உள்ள கிணற்றுப் பகுதிக்கு அருகே சென்று காதலியுடன் செல்போனில் பேசி வந்தார். இந்த நிலையில்,வெளிச்சம் மற்றும் சுற்றுசுவர் இல்லாத கிணற்றுப்பகுதி அருகே காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஆசிக், எதிர்பாராதவிதமாக […]
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் இன்று சேலத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் முதலில் சேலத்தில் வாழப்பாடியில் உள்ள காட்டுவேப்பேரிபட்டியில் புதிய அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.இதன்பின் அம்மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,அமைச்சர்கள் உடன் கலந்து பங்கேற்றனர். இந்நிலையில் இவ்விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில் காவிரி டெல்டா பகுதிகள் […]
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.மேலும் வேளாண் மண்டலங்களை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும்;ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அனுமதி தராது என்றும் அறிவித்துள்ளார். இன்று சேலத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் முதலில் சேலத்தில் வாழப்பாடியில் உள்ள காட்டுவேப்பேரிபட்டியில் புதிய அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.இதன்பின் அம்மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி பேசினார் அதில் காவிரி டெல்டா பகுதி […]
டெல்லியில் மாணவர்கள் மீதான போலீசாரின் தடியடியைக் கண்டித்தும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்து தமிழத்தில் மாணவர்கள் போராட்டம். மாணவர்களின் போராட்டம் காரணமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.அப்போது மாணவர்களை கடுமையாக போலீசார் தாக்கினர். போலீசாரின் இந்த தடியடியை கண்டித்தும், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருவாரூர் மாவட்ட நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் டெல்லி மாணவர்களை […]
உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுக்களை திருட முயற்சி நடைபெற்றுள்ளது. வேட்பு மனுக்கள் திருடும் முயற்சியானது திருவாரூர் அருகே அரங்கேறி உள்ளது.காவல்துறை விசாரணையில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 தேதி என இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான வேட்பு மனுக்களை அந்த பதவிக்கு வேட்பாளர்கள் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் அருகே வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலக பூட்டை உடைத்து ஆவணங்களை திருட முயற்சி நடந்துள்ளது.திருவாரூர் அருகே வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் […]
பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை மறந்த பிரம்மனுக்கு இந்த தலத்தில் தான் முருகன் அதனை கற்பித்தார். இத்தலத்திற்கு சென்று வழிபட்டால் குரு தோஷம், கண் பிரச்சனைகள், உடல் நலம், கல்வி என சகலமும் சரியாகிவிடும். திருவாரூர் மாவட்டம் என்கண் எனும் இடத்தில் இந்த கோயில் உள்ளது. சிவன் கோவிலாக இருந்தாலும் இந்த கோவிலில் முருகனுக்கு தான் தனிச் சிறப்பு உண்டு. அந்த சிறப்புக்கு என்று தனி வரலாறு உண்டு. நாம் மிகவும் கேட்டு பழகிய அந்த புராண வரலாறு […]
பயங்கரவாதிகள் 6 பேர் தமிழ்நாட்டில் ஊடுருவியதாக வந்த தகவலின் பேரில், தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். இதில், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில மணிநேரத்திற்கு முன்னர், நாகூரில் சையத் அபுதாகீர் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த போலீசார், அவரிடம் 2 மணிநேரத்துக்கும் மேலாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில், முத்துப்பேட்டையில் 10 […]
வரலாற்று சிறப்பு வாய்ந்த திருவாரூர் ஆழித்தேரோட்டம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர். வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் ஆழித்தேர் சிறப்பு வாய்ந்தது. இச்சிறப்புமிக்க ஆழித்தேரோட்டத்தையொட்டி கடந்த 20ஆம் தேதி தியாகராஜ சுவாமி ஆலயத்தில் இருந்து ஆழித்தேருக்கு எழுத்தருளினார். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. தேரடியில் இருந்து கீழரத வீதியில் புறப்பட்ட இந்த தேரோட்டம் ஆரூரா,தியாகேசா என்ற பக்தி முழக்கத்துடன் அசைந்தாடியபடி புறப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட எஸ். […]