விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். – திருமாவளவன். அண்மையில் அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தன்று இந்து முன்னணி கட்சி சார்பில் அச்சிடப்பட்ட போஸ்டர்களில் அம்பேத்கர் புகைப்படமானது காவி உடை அணிந்து இருப்பது போலவும், நெற்றியில் பட்டை இட்டுருப்பது போலவும் அச்சிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படங்கள் பெரும் சர்ச்சையானது அது போல பெரியாருக்கு காவி உடை அணிவித்தது, திருவள்ளுவருக்கு காவி உடை என அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்தது. தற்போது இதனை […]
ஒரு சிறு மாத்திரையில் வள்ளுவர் உருவத்தை வரைந்த ஏழை மாணவியின் அசாத்திய ஓவிய திறமையானது குடும்பச்சூழல் காரணமாக நின்றது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வெவ்வேறு விதமான திறமைகளும் விருப்பங்களும் இருந்தாலும் வயிற்று பிழைப்புக்காக கிடைத்த வேலைக்கு செல்லும் காலம் இது. இத்தகைய நிலையில் சிறு பொருள்களில் கூட ஓவியம் வரையும் திறமை கொண்ட இந்த பெண் தனக்கு விருப்பமான ஓவியக்கலை படிப்பில் குடும்ப சூழ்நிலையால் சேர முடியாமல் இருக்கிறாள். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆழங்குலம் அடுத்துள்ள ஊத்துமலை கிராமத்தை […]
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இன்று திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல்-இல் சிஎஸ்கே அணி வீரருமான ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கியுள்ளார். இவர் தமிழில் ஒரு வெப்சீரிஸில் நடிக்க உள்ளார். திருவள்ளுவரை பற்றி அந்த வெப்சீரிஸ் தயாராக உள்ளதாம். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கடந்த இரண்டு சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாண்டு வருகிறார். ஐபிஎல் சீசன் போதெல்லாம் அந்த நேரத்தில் தமிழில் ட்வீட் செய்து தமிழ் ரசிகர்களை வெகுவாக […]
உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை வைத்து தற்போது சில அமைப்புகள் அரசியல் செய்து வருகின்றன. ஒரு சில விஷமிகள் தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தினர். பின்னர் அப்பகுதியில் போராட்டம் நடைபெற்று போலீசார் பந்தோபஸ்து அளித்து வந்தனர். அதன் பிறகு இந்து கட்சியை சேர்ந்த அர்ஜுன் சம்பத் பிள்ளையார்பட்டியில் உள்ள சிலைக்கு ருத்ராட்ச மலை அணிவித்து பாலபிஷேகம் செய்து பூஜைகள் செய்தார். இது மிகவும் சர்ச்சையானது. பின்னர் அங்கு மீண்டும் போலீசார் […]
திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என பாஜகவினர் கருத்து தெரிவித்து வருவது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம், ‘ இது இந்திய நாடு, இந்து என கூறுகின்ற நாடு இல்லை. எனவும், திருவள்ளுவர் மீது காவி சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது. எனவும், தமிழர்கள் தற்போது நாகரீகமாக வாழ்ந்து வருவதால் வீதியில் இறங்கி […]