எத்தனை விழிப்புணர்வுகள், எத்தனை கடுமையான சட்டங்கள் , எத்தனை குற்றவழக்குகள், எத்தனை தற்கொலைகள் நிகழ்ந்தாலும், வரதட்சணை கொடுமை என்பது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதனால் மனமுடைந்து மணப்பெண் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த சம்பவத்தில் நன்கு படித்து சமூகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் ஈடுபடுவது தான் . கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார் […]
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மருதமோன்பள்ளி சாலையில் ஒயூர் பகுதியில் சாரா ரெஜி எனும் 6 வயது சிறுமி நேற்று மாலை சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். மாலை வழக்கம் போல தான் செல்லும் டியூசனுக்கு அந்த சிறுமி, தனது 8 வயது சக மாணவனுடன் சென்றுள்ளார். அப்போது வெள்ளை நிற மாருதி டிசையர் காரில் வந்த ஒரு கும்பல் சிறுமியை மாலை 4.45 மணி அளவில் கடத்தியுள்ளது. அதனை 8 வயது சிறுவன் தடுக்க முற்பட்டுள்ளான். […]
பாரத ஒற்றுமை யாத்திரை இன்று 5ஆம் நாளை தொட்டுள்ளது . கேரள, திருவனந்தபுரம் தொடங்கிய இந்த யாத்திரை கஜகூட்டம் பகுதியில் இன்று நிறைவடையும் என கூறப்படுகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை 150 நாட்களில் கடக்கும் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி இன்றோடு 5ஆம் நாளாகிறது. இந்த 5ஆம் நாள் பயணம் இன்று கேரளாவில், திருவனந்தபுரம் எல்லையில் தொடங்கி உள்ளார் ராகுல் காந்தி. […]