திருப்பதி கோவில் வளாகத்தில் வெள்ளப் பெருக்கால் தண்ணீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். வங்கக்கடலில் புதிதாக உருவாகி தற்போது கரையை கடந்துள்ள மாண்டஸ் புயலின் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் (நேற்று) வெள்ளிக்கிழமை கனமழை பெய்துள்ளது. இதனால் கோவில் வளாகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளப்பெருக்கால் கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள தண்ணீர் காரணமாக முதியவர்கள் உட்பட பக்தர்கள் தங்களது பயணங்களில் சிரமங்களை எதிர்கொண்டனர், மழையின் காரணமாக தரிசனம் தடைபட்டது. […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 95 லட்சம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக, இலவச சுவாமி தரிசனம் நடைமுறை கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, இலவச தரிசனத்திற்கு கடந்த 8-ஆம் தேதி முதல் கிட்டூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும், நாள்தோறும் 2,000 டோக்கன்படி வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளதால், செப்டம்பர் 20 […]
உலக நன்மைக்காக 7வது நாளாக சீனிவாச வேதமந்திர ஆரோக்கிய ஜபயக்ஞம் திருமலையில் நடத்தப்பட்டது. உலக பிரசித்திப்பெற்ற ஏழுமலையான் கோயிலினுள் ரங்கநாயகா் மண்டபத்தில் தென் மாநிலங்களிலிருந்து வந்த வேதபண்டிதா்கள் 30க்கும் மேற்பட்டோர் கடந்த 7 நாள்களாக இணைந்து சீனிவாச வேதமந்திர ஆரோக்கிய ஜபயக்ஞத்தை நடத்தி வருகின்றனா். இதில் சதுா்வேத பாராயணம் காலை 3 மணிநேரமும், மாலை 3 மணிநேரமும் பாராயணம் செய்யபட்டு வருகிறது.பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கவும், உலக மக்களின் ஆரோக்கியத்துக்காகவும் திருப்பதி தேவஸ்தானம் ஜபயக்ஞத்தை நடத்தி […]
உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் விமரிசையுடன் தொடங்கியது. திருமலையில் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக மாசி மாத பெளா்ணமிக்கு தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான விழா நேற்று முதல் ஸ்ரீவாரி திருக்குளத்தில் ஏழுமலையான் தெப்போற்சவம் விமரிசையுடன் தொடங்கியது. அதன் முதல் நாளான நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை சீதா, லட்சுமண ஆஞ்சநேய சமேத ஸ்ரீராமசந்திரமூா்த்தி ஐந்து முறை தெப்பத்தை வலம் வந்தாா். சுவாமி வலம் வரும் அற்புத […]
திருமலையில் நேற்று முதல் தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக நாற்காலி வசதி செய்து தரப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு திருமலையில் நேர்த்தி கடனாக தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக நாற்காலிகளை ஏற்பாடு செய்ய தேவஸ் தானம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.கூட்ட நெரிசலை தடுக்கவும் , வசதிக்காகவும் இந்த ஏற்பாடு செய்ததாகவும் கூறினார்கள். திருப்பதி ஏழுமாலையானுக்கு தினமும் 30 முதல் 35 ஆயிரம் பக்தர்கள் வரை தங்களது தலை முடியை நேர்த்திக் […]