திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக திருப்பதியில் இருந்து திருமலைக்கும், திருமலையில் இருந்து திருப்பதிக்கும் தனித் தனி மலைப்பாதைகள் உள்ளன. திருப்பதி மலைப்பாதைகளில் தினமும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், பக்தர்களின் சொந்த வாகனங்கள், தேவஸ்தான மற்றும் அரசு வாகனங்கள் வந்து செல்கின்றன. பகல் நேரத்தில் ஒரு மணிநேரத்தில் 250-லிருந்து 300 அரசு பஸ்களும், 200-லிருந்து 250 மோட்டார்சைக்கிள்களும், 10-லிருந்து 20 தேவஸ்தான வாகனங்களும், […]