வேதாரண்யத்தில் நாகை தெற்கு மாவட்ட காங். செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :- காவிரி மேலாண்மை வாரியத்தில் உறுப்பினர் நியமனம் செய்ய கர்நாடகாவை தமிழக அரசு தான் முனைப்போடு முன்னின்று செயல்பட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களுக்கு தீர்வு காணாமல் பாசிச போக்கை கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது. தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை […]
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ராகுல்காந்தியின் ராஜதந்திர மற்றும் மதிநுட்ப நடவடிக்கையாலும், உச்சநீதிமன்றத்தின் நியாயமான தலையீடு மற்றும் தீர்ப்பாலும் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் மத்திய அரசின் ஜனநாயக படுகொலைக்கு உட்படுத்தப்பட்டிருந்த இந்திய ஜனநாயகத்தின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. கர்நாடக சட்டமன்றத்தில் நீதியும், ஜனநாயகமும் வென்றுள்ளது. உச்சநீதிமன்றம் தன் தனித்தன்மையையும், பெருமையையும் காப்பாற்றி மக்களிடம் மீண்டும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் உரியவர்கள். மத்திய அரசின் கைப்பாவைகளாக செயல்படும் கவர்னர்களுக்கு […]
தி.மு.க.வில் இருந்த காலத்தில் குஷ்பு மிக நாகரீகமாக நடத்தப்பட்டார் என திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். முன்னதாக காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் மறைமலைநகரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர், குஷ்பு என்னை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. என்னை பதவியில் இருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். அந்த யோக்கியதை அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது. என்னை பதவி […]