மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரேகன் எனும் பகுதியில் பிரத்தியேகமாக திருநங்கைகளுக்கான முதல் கழிவறை இன்று திறக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சார்தி எனும் அறக்கட்டளை இந்த பொது கழிப்பறை கட்டி உள்ளது. திருநங்கைகளின் வசதிக்காக சில பகுதிகளில் பாலின வேறுபாடு இல்லாத நவீன கழிப்பறைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், மகாராஷ்டிராவில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பறை இதுதான் எனது சார்தி அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இட ஒதுக்கீடு பெற ஏதுவாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 3 ஆம் பாலினத்தவர்களான திருநங்கைகளை சேர்க்க மத்திய சமூக நீதித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி,மத்திய சமூக நீதித்துறை ஓபிசி பட்டியலில் திருநங்கைகளை சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. கல்வி,வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டின்கீழ் திருநங்கைகள் பயனடையும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Centre has moved […]