திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட யாரும் செல்போன் உபயோகப்படுத்த கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் அனைவரும் செல்போன் உபயோகபடுத்துகிறாரகள். சாமி சிலை முன்பு செல்பி எடுத்து கொள்கிறார்கள். அபிசேகம் செய்வதை வீடியோ எடுத்து யூ-டியூப் சேனல்களில் பதிவிடுகிறார்கள். நாகரீகமாக உடை அணிவதில்லை என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள், மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த […]
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்ததும் அடுத்ததாக இந்து கடவுள் முருகனுக்கு உகந்த திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெறும். இதற்காக சிறப்பு பூஜைகளுடன் வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கும். திருச்செந்தூர் கந்தசஷ்டி […]