திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய நாளை முதல் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை முதல் காலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்டுகிறது. தங்கத்தேர் வலம் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர்கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் 3 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மார்கழி மாதம் என்பதால் […]