Election2024: திருச்சியில் நாளை நடைபெற இருந்த பாஜக பேரணிக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வர உள்ளனர். இந்த நிலையில், திருச்சியில் பாஜக […]
Election2024: மக்களவை தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர், பா.ஜக உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் […]
திருச்சி விமான நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட புதிய விமான முனைய திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையத்தை திறந்து வைத்தார். முன்னதாக புதிய விமான நிலைய முனையத்தை பார்வையிட்டு பயணிகளுக்கான வசதிகளை குறித்து கேட்டறிந்தார் பிரதமர். இதையடுத்து, ரூ.20,140 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்தார் பிரதமர் மோடி. இந்த நிகழ்வின்போது, மத்திய அமைச்சர் […]
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி – புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இந்த பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது, 1,528 மாணவர்களுக்கு வழங்குவதன் அடையாளமாக 30 மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பட்டங்களை வழங்கிய பிறகு பிரதமர் மோடி, பல்வேறு தலைப்புகளில் முனைவர் பட்டம் […]
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 38- ஆவது பட்டமளிப்பு விழா, ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் இன்று வந்தடைந்தார். அப்போது, தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டார் பிரதமரை வரவேற்றனர். அதன் பிறகு திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு முதல்வர், பிரதமர், ஆளுநர் என மூவரும் சாலை […]
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை (ஜனவரி 2) பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார். நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, ரூ.1,100 கோடி மதிப்பில் திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைக்கிறார். இதன்பின், நாளை காலை 10.30 மணிக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 38வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார். இதனைத்தொடர்ந்து, நண்பகலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் ரூ.19,850 கோடி […]
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ திருச்சியில் ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் பாதிப்பால் டிசம்பர் 29 இல் நடக்க இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ திருச்சியில் ஜனவரி 26ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ […]
இன்றும் நாளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சென்று அங்கு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குகிறார். இன்றும் நாளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சென்று அங்கு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்று, அங்கு காட்டூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ‘வானவில் மன்றம்’ […]
திருச்சி ஜங்ஷனில் எஞ்சின் சோதனை ஓட்டத்தின் பொது தண்டவாளத்தில் இருந்து தடம் இறங்கியதால் அந்த வழியாக செல்ல இருந்த மற்ற ரயில்களின் நேரமும் தாமதமானது. திருச்சி ஜங்க்சனில் ரயில் எஞ்சின் ஒன்று பரிசோதனைக்கு தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. அப்போது ஜங்க்சனில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் அந்த எஞ்சின் தண்டவாளத்தில் இருந்து தடம் இறங்கிவிட்டது. அந்த இருப்பு பாதையானது, திருச்சியில் இருந்து மதுரை, ராமேஸ்வரம் , புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பாதை என்பதால் அந்த வழியாக செல்லும் […]
நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும். – உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை. திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயிலுக்கு சொந்தமா 5 ஏக்கர் நிலம், பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது எனவும், அதனை மீட்கும் நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயிலுக்கு சொந்தமா […]
திருச்சியில் விதிகள் மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே ஒரு கிராமத்தில் 51 சென்ட் நிலத்தில் 100 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு இருந்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு விதிகள் மீறி கட்டப்பட்டு இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சண்முகசுந்தரம் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், விதிகள் மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க வேண்டும் என […]
திருச்சி மாவட்டம் வளநாடு எனும் ஊரில் 7 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை நீடித்து வருகிறது. அதனை விற்க தடை நீடிக்கிறது. அவ்வப்போது காவல்துறையினர் அதிரடி சோதனையில் கிலோ கணக்கில் அவற்றை பறிமுதல் செய்து கைது நடவடிக்கையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி தான் தற்போதும் ஓர் அதிரடி வேட்டை நடத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் வளநாடு எனும் ஊரில் அதிக அளவில் குட்கா […]
திருச்சி மாவட்டம் முசிறி அருகே, தாத்தையங்கார் பேட்டை என்ற தா.பேட்டை பகுதில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கனரா வங்கியில் காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மனைவி இறந்துவிட்டார். குழந்தையில்லை. இவர் மட்டும் தனியே வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு தனியாக தா.பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த முத்துசாமியை மர்ம நபர்கள், காரில் கடத்தி, இரவு முழுவதும் வீட்டு சாவியை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அவரது […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திருச்சி மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். பல்வேறு துறைகளில் ஏற்கனவே முடிவுற்ற 203 திட்டங்களை திறந்து வைக்கிறார். மேலும், புதிதாக 532 பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். அதுமட்டுமல்லாமல் 327 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு துறைகளின் கீழ் சுமார் 40,344 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த நிகழ்வில் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை திருச்சி மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை திருச்சி மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். அங்கு தயானூர், திருச்சிராப்பள்ளியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் 303 முடிவுற்ற நலத்திட்ட பணிகள், 532 அடிக்கல் நாட்டும் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் 40,344 பேர் பயன்பெறுகின்றனர். இந்த நிகழ்வில் செயல்படுத்தப்படவுள்ள நலத்திட்ட உதவிகளின் மொத்த மதிப்பீடு ரூ.1084.80 கோடி ஆகும்.
திருச்சி:பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட கரூர் மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியரான சரவணன் என்பவர், தற்கொலை செய்து கொண்டது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம்,வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த நவ.19 ஆம் தேதியன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, பெற்றோர் மற்றும் […]
சென்னை:கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவியை அவரின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு. பூமிநாதன் அவர்கள் 21-11-2021 அன்று அதிகாலை ஆடுகள் திருடும் கும்பலை இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று கீரனூர் அருகே மடக்கி பிடித்தபோது, காவல் துறையினரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஆடுகள் திருடும் கும்பல் காவல் துறை […]
சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடததப்படுவது, பாடத்திட்டங்களை முடிப்பதற்காக தான். இது பழைய நடைமுறை தான். இருப்பினும் இந்த நடைமுறை படிப்படியாக தளர்த்தப்படும். திருச்சி : திருச்சி பொன்மலைப்பட்டியில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், குழந்தைகள் மீதான பாலியல் தடுப்பு தினமான வரும் 19-ஆம் தேதி, சென்னையில் சிறப்பு நிகழ்வு ஒன்று நடத்தப்படவுள்ளது. ஆசிரியர் கலந்தாய்வு விதிமுறைகள் அடுத்த […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்தை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு நடத்த விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். திருச்சி : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது. குறிப்பாக சென்னையில் மழையால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக […]
படைக்கலத் தொழிற்சாலை திருச்சி என அழைக்கப்படும் இந்திய அரசின் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள பாதுகாப்புத் தொழிற்சாலை ஆகும். இது இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் கீழ் இயங்கும் 41 படைக்கலத் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இது 3 ஜூலை 1966 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் இந்த தொழிற்ச்சாலையில் உற்பத்தி 1967ல் ஆரம்பமானது. இங்கு, மத்திய மற்றும் மாநில போலீஸ் பாதுகாப்பு படையினருக்கான, பல்வேறு ரக துப்பாக்கிகள் தயார் செய்யப்படுகின்றன. இந்நிலையில், […]