கோயில் சொத்துக்கள், நகைகள், சிலைகள் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் மென்பொருளின் ஒளி வருடல் செய்ய குமரகுருபரன் உத்தரவு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆணையர் அலுவலகம் மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் ஒளிவருடல் செய்யப்பட்டு மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. திருக்கோயில்களில் உள்ள சட்டப் பிரிவு 29 பதிவேடுகள் உள்ளிட்ட முக்கிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் பழைமையாகி பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதால், உடனடியாக அத்தகையவைகளை ஒளிவருடல் செய்து […]
திருக்கோயில் சிலைகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்ய தமிழ்நாடு தொல்லியல் துறை 12 குழுக்களை அமைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்ய தொல்லியல் அலுவலர்கள் அடங்கிய 12 குழுக்களை தமிழ்நாடு தொல்லியல் துறை அமைத்துள்ளது. அதன்படி,தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உட்பட்ட சென்னை,வேலூர்,விழுப்புரம் திருச்சி ,தஞ்சாவூர்,காஞ்சிபுரம்,மயிலாடுதுறை,சேலம்,கோவை,மதுரை,சிவகங்கை,திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கான 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும்,ஒவ்வொரு குழுவுக்கும் இரண்டு அல்லது மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த […]