முன் காலத்தில் முல்லை வனம் என்று இத்தலம் போற்றப்பட்டது.மகரிஷிகள் சிலர் தவம் செய்து வந்தனர்.அதில் ஒரு மகரிஷி நித்துருவர் அவரின் மனைவி வேதிகை தன் கணவர்க்கும் மற்ற மகரிஷிகளுக்கும் பணிவிடைகள் செய்து வந்தாள் வேதிகை. நெடுநாள்காக இந்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை முல்லை வன நாதரை எண்ணி வழிபட்டனர் அவர்களின் பக்திக்கு இறங்கிய இறைவன் அருளால் வேதிகை தாயார் கருவுற்றார். கருவுற்ற வேதிகை தனித்திருந்த சமயத்தில் கர்ப்ப வழியால் மயக்கமுற்று சுயநினைவின்றி கிடந்தார்.அங்கு வந்த ஊர்த்துவ […]
பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை விக்னேஸ்வர பூஜையும், கணபதி ஹோமமும் நடைபெற்றது. இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நவக்கிரக ஹோமம், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி நடக்கிறது. நாளை(சனிக்கிழமை) காலை 6.40 மணிக்கு மேல் கொடியேற்றமும், மாலை ஆன்மிக சொற்பொழிவும், மகாலட்சுமி குழுவினர் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. 20-ந்தேதி இரவு 7 மணிக்கு காந்திமதியின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. […]