தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும் என தமிழக சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு. தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அதிமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன், கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் என்ன மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து பட்டியலிட்டு பேசினார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும், வேறு எவராலும் தமிழ்நாட்டை ஆள முடியாது என்று தெரிவித்தார். இதற்கு பேரவையில் திமுக […]