திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் நேற்று கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவித்த நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க, அண்ணா அறிவாலயத்திற்கு வருகை புரிந்துள்ளார். சென்னை மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.சங்கரை கட்சியிலிருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் […]