இன்று ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. எனினும்,ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக,கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் செங்குறிச்சி பகுதியில் தனி வார்டு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி […]