திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற கோரிய கடிதம் குடியரசு தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தமிழகத்தின் 15வது ஆளுநராக மேகாலயா, நாகாலாந்தில் ஆளுநராக பணியாற்றிய ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். தமிழக ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவி, தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை பேசி வருகிறார். மேலும், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் கையெழுத்திட காலதாமதம் ஆக்குகிறார் என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து, ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி […]
திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் விழுப்புரம் அருகே கார் விபத்தில் இன்று பலியாகியுள்ளார்.புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும்போது விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே எம்பி என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் ஓட்டி வந்த கார் தடுப்புச் சுவரில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து,மகனை இழந்து வாடும் திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோவிற்கு திமுகவினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,என்.ஆர்.இளங்கோ அவர்கள் எத்தகைய வேதனைக்கு ஆளாகியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே உடலும்,உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது என்று கூறி […]