நாளை சட்டப்பேரவை கூட்ட தொடர் தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், எம்எல்ஏ-வின் உதவியாளர் மற்றும் ஓட்டுனருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.