ஒவ்வொரு வருடமும் மே 5ஆம் நாள் சர்வதேச மருத்துவச்சியின் தினம் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் மகப்பேறு மருத்துவர்கள், மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகளில், உச்சவரம்பு மையங்கள், குடும்ப திட்டமிடல் மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் மகப்பேறு மருத்துவர்கள், துணை-மகப்பேறு மருத்துவர்களை சிறப்பிப்பதே இந்த நாளின் நோக்கம். இந்த தினம் முதலில் நெதர்லாந்தில் உள்ள வெகுஜன மாநாடுகளின் சர்வதேச மாநாட்டில் 1987 ஆம் ஆண்டில் சர்வதேச மருத்துவ நாள் தொடங்கியது. ஆனால் இந்த தினம் அதிகாரப்பூர்வ விடுமுறை 1992 […]
உலகில் முதன்முதலில் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்ட தீயணைப்புப் படையினர் தினம் தற்போது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றனர். கடந்த 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 தீயனைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.இவர்களை நினைவு கூறுவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் மிகப்பெரிய பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே மாதம் 4 ஆம் நாள் உலக தீயனைப்பு படையினர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் தீயணைப்புப் படையினர் […]
இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களில் சமண மதமும் குறிப்பிடத்தக்கது. இந்த சமண மதத்துறவியாக வாழ்ந்தவர் மகாவீரர். இவர், பிற உயிர்களுக்கு தீங்கறியாத நிலையே மகாவீரரின் வாழ்க்கை லட்சியங்களில் மிகவும் முக்கியமானதாகத் திகழ்ந்தது. மகாவீரரைப் பின்பற்றி அவரது வழியில் நடப்போர் சமணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சமணர்கள் மட்டுமல்லாது மகாவீரரின் போதனைகளை பின்பற்றுவோர் அனைவருமே மகாவீரர் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். இன்று மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வரலாறு: வைசாலிக்கு அருகிலுள்ள குண்ட கிராமம் எனுமிடத்தில் கி.மு. 599-ல் ஒரு க்ஷத்திரிய […]
கடந்த 16-ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியை ஆண்டின் தொடக்க நாளாக கருதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. தற்போது ஜனவரி மாதம் 1ஆம் தேதி கொண்டாடப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அத்தனையும், அந்த நாடுகளில் ஏப்ரல் 1-ஆம் தேதியில் கடைபிடிக்கப்பட்டன. காரணம், அப்போதைய ஜூலியன் நாள்காட்டியில் ஏப்ரல் 1-ந்தேதி தான் ஆண்டின் தொடக்கமாக புத்தாண்டு தினமாக குறிப்பிடப்பட்டு இருந்தது. பின் 13-ம் கிரகரி என்ற போப் ஆண்டவர் ஜனவரி 1ஆம் […]
காசநோய் ஒரு தொற்று நோய் ஆகும். இந்த நோய்க்கு ஆரம்ப நிலையில் நல்ல சிகிச்சை அளிக்காவிடில் இது மிக அதிக பாதிப்பினை ஏற்படுத்தும். இந்த நோய் தாக்கும் பாக்டீரியாவின் பெயர் மைக்கோ பாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ் என்பது ஆகும். இந்த பாக்டீரியம் நுரையீரலிலும், தொண்டையிலும் ஏற்படும் இத்தாக்குதலே அவரது சளி, எச்சில் மூலமாக காற்றில் அடுத்தவரை பாதிக்கச் செய்யும். ஆனால் டிபியின் தாக்குதல் சிறுநீரகம், மூளை, எலும்பு இவற்றிலும் கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த டி.பியை […]
தண்ணீர்தான் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம். அதற்கு ஈடு இணை ஏதும் இல்லை. தண்ணீருக்கு மாற்று இவ்வுலகில் ஏதுமில்லை. தண்ணீர் புவியில் கிடைக்கும் வற்றாத ஒரு செல்வமும் அல்ல, அதை வீணாக்கக்கூடாது. தண்ணீரின் முக்கியத்துவம், அதன் தேவை உணர்த்தும் நோக்கில் ஐ.நா. சபை டிசம்பர் 1992ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின்மூலம் மார்ச் 22ஐ உலக தண்ணீர் தினமாக அறிவித்தது. 1993ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.இன்று உலகம் முழுவதும் சர்வதேச தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ம் […]
இன்று உலகம் முழுவதும் சர்வதேச தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐநா பேரவைக் கூட்டத்தொடரில் வைக்கப்பட்ட 21-ம் நூற்றாண்டின் தீர்மானத்திற்கிணங்க 1993-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22-ஆம் நாளும் உலக நீர்வள நாளாகக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. இந்த நாளை கொண்டாடப்பட காரணம் என்னவென்றால், உலகில் நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் […]
சிட்டுக்குருவி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் பறவையினத்தைச் சேர்ந்தது ஆகும். இவை பசரீங்கள் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். தமிழகத்தில் இவை அடைக்கலக்குருவி, வீட்டுக்குருவி, ஊர்க்குருவி, சிட்டுக்குருவி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த சிட்டுக்குருவிகள் குறித்த சிறப்பு தொகுப்பு.. உடல் அமைப்பு சிட்டுக் குருவிகள் உருவத்தில் மிகவும் சிறியனவாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். இதற்கு, சிறிய அலகு, சிறிய கால்களுடன்காணப்படும். இவை 8 முதல் 24 செ.மீ நீளமுள்ளவை. பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளை […]
அரியானா மாநிலம் இசாரில் சாய்னா நேவால் மார்ச் மாதம் 17ஆம் நாள் 1990 அன்று பிறந்தவர்.பிறந்த சாய்னா, தனது வாழ்வில் அதிகம் ஐதராபாத்திலேயே வாழ்ந்திருக்கின்றார். அவரது தந்தை முனைவர் அர்வீர் சிங் எண்ணெய்வித்துக்கள் ஆய்வு இயக்ககத்தில் அறிவியலாளராகப் பணிபுரிகிறார். அவரது தந்தையும் அன்னை உசா நெவால் இருவரும் முன்னாள் இறகுப்பந்தாட்ட வீரர்கள் ஆவர். இவரது அயராத உழைப்பின் காரணமாக 2004ஆம் ஆண்டு பிபிசிஎல் (BPCL) நிறுவனம் இவரை பணிக்கு அமர்த்தியது. இவரின் சாதனைகள்: ஒரு இந்திய […]
பிறப்பு: கார்ல் மார்க்ஸ், ஐரோப்பா கண்டத்தின் ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் என்னும் நகரில் 1818 மே மாதம் 5ஆம் நாளில் பிறந்தார். இவரது தந்தை ஹைன்றிச், மார்க்ஸ் பிறக்கும் முன்பே யூதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர்ஆவர், கார்ல் மார்க்ஸ் இவருக்கு மூன்றாவது மகனாவார். கல்வி: 1830 வரை இவருக்கு தனிப்பட்ட முறையில் தான் கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயில […]
சுஜாதா என்று அழைக்கப்பட்ட ரங்கராஜன் மே மாதம் 3ஆம் தேதி, 1935ஆம் ஆண்டு பிறந்தார். இவர்,தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார்.இவரது இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்து தன்வசப்படுத்திய ஆற்றல்மிக்க கலைஞராவார். இவர் திருவரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, பின், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் […]
குழந்தைகள் மீது மிகுந்த பற்றும், மாறாத அன்பும் பற்றும் கொண்டு விளங்கியவர், மற்றும் குழந்தைகளைக் காணும்போதெல்லாம் அவர்களை உச்சி முகர்ந்து முத்தமிட்டு வாழ்த்தி மகிழும் தாயுள்ளம் கொண்டவர் நமது முன்னால் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள். அதிலும், குறிப்பாக, பெண் குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, அவர்கள் முன்னேற்றத்திற்காக அரும்பாடு பாடுபட்டவர், அன்னை தெரசாவால் பாராட்டப்பட்ட “தொட்டில் குழந்தைகள் திட்டம்”, “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்”, “அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள்”, […]
கடந்த 1952 ஆம் ஆண்டு இதே நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட வங்கதேச தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்பட்டு சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை உலக தாய்மொழி தினமாக முதன்முறையாக 1999-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் கொண்டு வரப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த […]