அதிமுக லேடி வழியில் போகவில்லை, மோடி வழியில் தான் போகிறார்கள் – கி வீரமணி
அதிமுகவை பொறுத்தவரையில், பாஜக ஆட்டுகின்ற பொம்மலாட்டத்திற்குள் சிக்கியுள்ளதால், இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது என கி.வீரமணி பேட்டி. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து திராவிட கழக தலைவர் கே.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுகவை பொறுத்தவரையில், பாஜக ஆட்டுகின்ற பொம்மலாட்டத்திற்குள் சிக்கியுள்ளதால், இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. பொன்விழாவை அவர்கள் கொண்டாட வேண்டிய காலகட்டத்தில் புண்விழாவாக அதை மாற்றி கொண்டு, பல குழுக்களாக பிரிந்துள்ளனர். பாஜகவுடன் […]