அதிமுகவினர் வசம் உள்ள காங்கேயம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்றும் முயற்சியில் திமுக எம்எல்ஏக்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் வருகின்ற பிப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.இதனால்,அரசியல் கட்சிகள் வாக்குச் சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில்,திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம்,வெள்ளகோவில் நகராட்சிகள்,மூலனுார் பேரூராட்சி ஆகியவற்றை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் காங்கயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும்,தமிழக செய்தித்துறை அமைச்சருமான சாமிநாதன் ஈடுபட்டு வருகிறார். ஏனெனில்,கடந்த, 2011 ஆம் […]