சென்னையில் சென்டிரல், எழும்பூர் என இரண்டு ரெயில் முனையங்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக தாம்பரம் ரெயில் நிலையம் முனையமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ரூ.49 கோடி செலவில் அதற்கான பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இன்று மூன்றாவது முனையத்தை மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார். மேலும், தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட அந்த்யோதயா ரெயிலையும் மந்திரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை […]