Selaiyur SSI : வங்கதேசத்தில் ஊடுருவ முயன்றதாக தாம்பரம், சேலையூர் சிறப்பு SI அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர் காவல்நிலைய சிறப்பு துணை காவல் ஆய்வாளர் (SSI) ஜான் செல்வராஜ், இன்று வங்கதேச நாட்டு எல்லையில் ஊடுருவ முயன்றதாக அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சேலையூர் காவல்நிலைய SSI ஆக பணியாற்றி வந்த ஜான் செல்வராஜ், கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பணியில் தொடர்ந்து ஈடுப்பட்டு […]
கிராமசபை போல நகரசபை மற்றும் மாநகரசபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரும் நவம்பர் 1ஆம் தேதி இந்த கூட்டங்கள் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில் ஏற்கனவே குறிப்பிட்டது போல, கிராமசபை கூட்டங்கள் தமிழகத்தில் நடைபெறுவது போல நகர சபை கூட்டங்கள், மாநகர சபை கூட்டங்கள் மக்களால் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில், வரும் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் நாளில் தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் […]
தாம்பரம் துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கன்டெய்னரில் உள்ள 98 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிய 7 பேர் கொண்ட கும்பல் தாம்பரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு, வெளிநாட்டில் இருந்து உள்நாட்டிற்கு துறைமுகம் வாயிலாக கண்டெய்னர் மூலம் பொருட்கள் அனுப்பப்படும். அப்படி, தாம்பரம் துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக கண்டெய்னர் பெட்டியில், மருந்து பொருட்கள் இருந்துள்ளன. இந்த கண்டெய்னர் பெட்டியின் சீலை கூட உடைக்காமல், நூதனமாக அதனுக்குள்ளே இருந்த 98 […]
கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. இதனால், தாழ்வான இடங்களில் மீண்டும் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. கனமழையால் மழைநீர் தேங்கியுள்ளதால், தி.நகர் மேட்லி சுரங்க பாதை மற்றும் ரங்கராஜபுர சுரங்கப்பாதை மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் […]
தாம்பரம்:மழை வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு 8 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இதனையடுத்து,மீண்டும் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குளாகி […]
தமிழகத்தின் 20 மாநகராட்சியாக தாம்பரத்தை அறிவித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்துள்ள தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் என அனைத்தையும் இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த அவசர சட்டம் மூலமாக தாம்பரம் தமிழகத்தின் 20 ஆவது மாநகராட்சியாக உருவாகியுள்ளது.
தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தை மாநகராட்சியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தாம்பரம்,பல்லாவரம்,செம்பாக்கம்,பம்மல்,அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் 16 வது மாநகராட்சியாக உருவாகிறது தாம்பரம் மாநகராட்சி. அதேபோல, காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் சென்டிரல், எழும்பூர் என இரண்டு ரெயில் முனையங்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக தாம்பரம் ரெயில் நிலையம் முனையமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ரூ.49 கோடி செலவில் அதற்கான பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இன்று மூன்றாவது முனையத்தை மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார். மேலும், தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட அந்த்யோதயா ரெயிலையும் மந்திரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை […]