லக்னோ: உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் திகழ்ந்து வருகின்றது. உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், சலவைக்கற்களால் வடிக்கப்பட்ட கம்பீரக் கவிதையாகவும் நிமிர்ந்து நிற்கும் தாஜ் மஹால் சமீபகாலமாக நிறம்மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது. இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.சி. மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் தாஜ் மஹாலின் பொலிவும், கவர்ச்சியும் மேலும் […]