TVK : விஜய் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயார் என ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். அதனை தொடர்ந்து அண்மையில், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் இருக்கும் போதே, அவரின் […]
TVK Vijay: மக்களுக்கு விரோதமாக இருக்கும் சிஏஏ சட்டத்தை ஏற்க முடியாது என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். 2019-ஆம் ஆண்டு CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது அந்த சட்டம் அமலுக்கு வருவதாக நேற்றைய தினம் மத்திய அரசு அறிவித்தது. READ MORE – குடியுரிமை சட்டத்திருத்த சட்டம் அமல்.! அசாமில் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்.! இந்நிலையில், சிஏஏ-வை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் […]
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை படிவம் என பரவி வரும் இந்த படிவம் பொய்யானது என கட்சியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய் கட்சியை தொடங்கியதை அடுத்து, கட்சியின் செய்லபாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் காணொளி வாயிலாக கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியதாக […]
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கினார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய பின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், போட்டியிடுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டர். இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தலைவர் விஜயின் உத்தரவின் பேரில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 19-ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் உத்தரவின் பேரில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை சென்னை சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தலைவர் காணொளி வாயிலாக கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியதாக கூறப்பட்டது. மேலும் அந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் […]
தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை சேர்த்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு பலர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், சிலர் எதிர்மறை விமர்சனத்தை முன் வைத்தனர். அந்த வகையில், கட்சி பெயரில் “தமிழக வெற்றி(க்) கழகம்” இலக்கணப்பிழை இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், […]
நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் இன்று காலெடுத்து வைத்துள்ளார். அதன்படி, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த பணிகளை முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் என்றும் நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல்.? 2026 தேர்தல் தான் இலக்கு.! […]
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் மன்றமாக மாற்றி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். நீண்ட காலமாகவே விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட போகிறார் என்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தன. “தமிழக வெற்றி கழகம்” அதிகாரப்பூர்வமாக கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்.! இந்நிலையில் தான் இன்று திடீரென தனது கட்சி பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார் என்ற செய்தி காலை முதல் இணையத்தில் உலா […]