ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்துவருகிறது. இதுவரை ஏராளமான பொதுமக்களும், பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளையும் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடு என்பதால் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு 5 நாள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்ற தலிபான் […]