ஆப்கானிஸ்தானில் தடையை மீறி பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முயன்ற பெண்களை தலிபான்கள் தடுத்தி நிறுத்தினர். ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகத்தில் படிக்க தலிபான்கள் அண்மையில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு நாடுகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பெண்கள் உயர்கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தான் பெண்களே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் தாலிபான்கள் விதித்த தடையை மீறி பெண்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முற்பட்டனர். ஆனால், பல்கலைக்கழக வாயிலிலேயே தாலிபான்கள் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். என […]
பெண் கல்விக்கு தாலிபான்கள் தடை விதித்ததை அடுத்து பல்கலைக்கழகத்தில் பெண்கள் கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரல் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சகம், அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவிற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பெண் கல்விக்கு தாலிபான்கள் தடை விதித்ததை அடுத்து […]
கடந்த ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து,பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. இந்த சூழலில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடந்த புனித வெள்ளியன்று பாகிஸ்தான் விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் குழந்தைகள் உட்பட சுமார் 60 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. பாகிஸ்தான் தூதர் வருகை: இதைத் தொடர்ந்து,ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் குனார் மாகாணங்களில் பாகிஸ்தான் படைகள் நடத்திய இராணுவத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக காபூலில் உள்ள பாகிஸ்தான் […]
ஆப்கானிஸ்தானின் பொழுதுபோக்கு பூங்காக்களில் பாலினப் பிரிவினையை தலிபான்கள் அமல்படுத்தியதாகக் கூறப்படுகிறது, ஆண்களும் பெண்களும் ஒரே நாளில் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 4 நாட்கள் புதன் முதல் சனிக்கிழமை வரை ஆண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படும் அதே வேளையில், பெண்கள் வாரத்தின் பிற்பகுதியில் மற்ற 3 நாட்கள் அங்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானில் பாலினப் பிரிவினை விதிகளை மேலும் அமல்படுத்தும் என்று செய்தி நிறுவனம் ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது. கடந்த மாதம், தலிபான்கள் தங்களது […]
ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி,தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் நேற்று முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக,ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து,தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது. இதற்கிடையில்,ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி ஆகஸ்ட் 15 அன்று காபூலை விட்டு வெளியேறினார்.பின்னர் கனி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தப்பிச் சென்றார்.மேலும்,லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் […]
காபூல் பல்கலைக்கழக துணைவேந்தர் மாற்றப்பட்டதையடுத்து 70 ஆசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். காபூல் பல்கலைக்கழகத்தின் பிஎச்டி படித்த துணைவேந்தர் முஹம்மது ஒஸ்மான் பாபுரியை தலிபான்கள் பதவி நீக்கம் செய்து அவருக்குப் பதிலாக பிஏ பட்டம் பெற்ற முஹம்மது அஷ்ரப் கெய்ரத்தை நியமித்தனர். இதனையடுத்து,காபூலை தளமாகக் கொண்ட மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக அஷ்ரஃப் கயரத் நியமிக்கப்பட்டிருப்பது சமூக ஊடகங்களில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில்,கடந்த ஆண்டு அஷ்ரப் கெய்ரத்தின் ஒரு ட்வீட்டை விமர்சகர்கள் முன்னிலைப்படுத்தினர்,அதில் அவர் ஒரு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தினார். இதற்கு […]
ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.அதற்கான காரணம் இதுதான். உலகின் மிக இலாபகரமான மற்றும் முக்கியமான கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான்கள் தற்போது தடை விதித்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் இடம் பெறும் நடனம் மற்றும் அரங்கங்களில் பெண் பார்வையாளர்கள் இருப்பதை மேற்கோள் காட்டி ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் ஐபிஎல் ஒளிபரப்பப்படுவதற்கு எதிராக தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இஸ்லாமிய கட்டமைப்பிற்குள் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்று […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசாங்கத்தில் ஆண்களை மட்டுமே துணை அமைச்சர்களாக நியமித்து அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த செய்தி மாநாட்டில் துணை அமைச்சர்கள் பட்டியலை இன்று அரசு செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வழங்கியுள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த அனைவரும் ஆண்கள் மட்டுமே. பெண்கள் பெயரை இதில் குறிப்பிடவில்லை. துவக்கத்தில் தலிபான்கள் பெண்கள் உரிமைகளை நிலைநிறுத்துவதாக வாக்குறுதிகள் தந்த நிலையில், தற்போது அவர்கள் பெண்களுக்கு பல்வேறு உரிமைகளை மறுத்து வருகிறார்கள். தற்போது இந்த துணை அமைச்சர்கள் பட்டியலில் […]
ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்கு செல்ல தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில்,பெண்களை ஒடுக்க மாட்டோம் என்று தலிபான்கள் வாக்குறுதி அளித்தனர்.ஆனால்,அதற்கு மாறாக தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் கல்வி கற்பதற்கும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு மந்திரி சபையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் கல்வித்துறை மந்திரி அப்துல் பாகி ஹக்கானி பெண்களின் உயர்கல்வி குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்டார்.அதன்படி, பெண்கள் பல்கலைக்கழகங்களில் […]
தலிபான்கள் ஆட்சியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆப்கான் மகளிர் கால்பந்து அணி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் நாட்டிலிருந்த பிற நாட்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வந்தனர். தற்போதும் ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், பலரும் இதற்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அந்நாட்டின் மகளிர் கால்பந்து அணியினர் தற்போது பாகிஸ்தானில் தஞ்சம் […]
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் 55% பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர் என்று காலுப்( Gallup) பாகிஸ்தான் நியூஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 15-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றிவளைத்த தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, 20 ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்க படை முழுவதும் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு முழுவதும் வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரத்தையும் தங்கள் வசப்படுத்தினர். இதனையடுத்து,புதிய அரசின் அமைச்சரவை பட்டியலை தலிபான் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். […]
பெண்கள் மந்திரிகளாக முடியாது, அவர்கள் குழந்தை பெற்க வேண்டியவர்கள் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் கல்வி கற்பதற்கும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்பொழுதும் பெண்களுக்கு மந்திரி சபையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறியுள்ள தலிபான் செய்தி தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷீமி, ஆப்கானிஸ்தானில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை மந்திரி சபையில் அனுமதிக்க முடியாது […]
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விவகாரத்திலும் தீவிரமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று,நாட்டின் பாதுகாப்பு குறித்து பேசினார்.இந்த நிலையில், ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி நடக்கும் நிலையில்,நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விவகாரத்திலும் தீவிரமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் […]
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்திற்கு தலிபான்கள் சீல் வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள அமெரிக்கா, இந்தியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்களும் அவசர அவசரமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையம் அமெரிக்க ராணுவப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்த விமான நிலையம் மூலமாக மக்கள் அனைவரும் பிற நாடுகளுக்கு […]
ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி உதவியை உலக வங்கி நிறுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பின்பதாக மீண்டும் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், புதிய அரசு அமைப்பதில் தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் உயிரை பாதுகாத்து கொள்வதற்காக பிற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு வீரர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களை அழைத்து வரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் […]
வருகின்ற ஆகஸ்ட் 31-க்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் அங்கிருந்து வெளியேற விரும்பக்கூடிய மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தான் கலவரம் குறித்து ஆலோசனை செய்வதற்காக கனடா, பிரான்ஸ், […]
ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அதிபர் அஷ்ரப் கனி நேற்று அறிவித்தார். அதே சமயம், இன்ன பிற வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளான அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறும் என கூறியிருந்தார். இந்த போர்நிறுத்த அறிவிப்பை தலிபான்கள் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லையா? என்ற தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் கிழக்கு பகுதியில் உள்ள நங்கார்கர் மாகாணத்தில் நடந்த சண்டையில் […]