தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் அடங்கிய பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமணம் செய்ய கடந்த வாரம் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.அதன்படி,4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 7,500 ரூபாயிலும்,5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.12 ஆயிரம் என்ற அடிப்படையில் பணிநியமனங்களை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தில் காலியாகவுள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு […]