தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவை திட்டங்களை கொண்டுவந்தார். இந்த திட்டங்களை அமல்படுத்திட சம்பந்தப்பட்ட துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் கெஜ்ரிவால் உத்தரவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புறக்கணித்தனர். இதுதொடர்பாக அவர் நேற்று இரவு துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை சந்திக்க அவரது இல்லம் சென்றார். ஆனால், அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. […]