பிரதமரின் நாடாளுமன்ற அலுவலகத்தில் அதிமுகவை சேர்ந்த தம்பி துரை, பிரதமர் மோடியை சந்தித்து பேசி உள்ளார். பிரதமரின் நாடாளுமன்ற அலுவலகத்தில் அதிமுகவை சேர்ந்த தம்பி துரை, பிரதமர் மோடியை சந்தித்து பேசி உள்ளார். அப்போது குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் தமிழகத்தின் அரசியல் நிலவரம் பற்றியும் பேசப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.இதனிடையே,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ள நிலையில்,சென்னை,கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்திற்கு அதிமுக மாநில மற்றும் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள்,அதிமுக எம்.பி. தம்பிதுரை,முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வருகை புரிந்தனர்.அவர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார்.அதே சமயம்,தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அவர்களும் ஒற்றை தலைமை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையில்,அதிமுகவில் மொத்தம் 75 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில்,கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு 11 மாவட்ட செயலாளர்கள் […]