வேலூர்:இன்று அதிகாலை வேலூர் அருகே நில அதிர்வு உணரப்பட்டதாக தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு தகவல். வேலூரில் இருந்து மேற்கு-தென்மேற்கு திசையில் 59 கிமீ தொலைவில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.17 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.நில அதிர்வால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா என ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.