சென்னை:தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என பெயர் சூட்டியவர் கலைஞர் அவர்கள்தான் என்றும்,மருத்துவ மாணவர்கள் அனைவரும் கிராமப்புற பகுதிகளுக்கு சென்று மருத்துவ சேவை ஆற்ற வேண்டும் என்றும் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 34 வது பட்டமளிப்பு விழா தற்போது நடைபெற்று வருகிறது.அதன்படி,இந்த விழாவில் மருத்துவ படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படுகிறது. இவ்விழாவில்,தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.முதல்வராக […]