கடந்த சில நாட்களுக்கு முன் மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிலும், சென்னையில் பெய்த கனமழை அங்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் சேனையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அதனை தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள், மீட்புக்குழுவினர் என ஆயிரக்கணக்கானோர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர். பொங்கல் பண்டிகை – அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்…! இந்த மழை வெள்ளத்தில் […]
22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு இன்று தமிழகம் வருகிறது. கடந்த 11-ஆம் தேதி, தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய உணவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், 22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு […]
எம்.எல்.ஏக்களின் 10 முக்கிய கோரிக்கைகளை, செயல்படுத்த 10 குழுக்கள் அமைத்து உத்தரவு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தங்களது தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை, அந்தந்த ஆட்சியர்களிடம் மனுவாக அளிக்குமாறு தெரிவித்திருந்தார். அதன்படி அனைத்து தொகுதி எம்எல்ஏ-க்களும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் எம்எல்ஏக்களால் அளித்த 10 கோரிக்கைகளை முன்னுரிமையில் நிறைவேற்ற உங்கள் தொகுதியில் […]
அரசியல் கட்சி தொண்டர்களே சட்டம் ஒழுங்கை பார்த்துக்கொள்வர் என்றால் காவல் துறையும் நீதிமன்றங்களும் எதற்கு? என பீட்டர் அல்போன்ஸ் கேள்வி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ்நாட்டில் தேசத்துக்கு எதிரான சக்திகள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வர நம் தொண்டர்களுக்கு வெறும் அரை மணி நேரம் போதும். ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஒரு அமைதியை விரும்பக்கூடிய கட்சி. அடுத்த இரண்டு நாட்கள் பார்ப்போம். தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை செயல்பாட்டை பார்த்துவிட்டு எங்களது […]
ஆந்திர மாநில முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு எதிராக பேசியிருக்கிறார் என்றால் அதனை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எதிர்க்கட்சிகளின் கடமை என ஓபிஎஸ் அறிக்கை. பாலாற்றின் குறுக்கே அனுமதியின்றி இரண்டு புதிய நீர்த்தேக்கங்களை கட்ட நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஆந்திர அரசின் செயல்பாட்டினை உடனடியாக தடுத்து நிறுத்தி, கனகநாச்சியம்மன் திருக்கோயில் அருகே இருக்கும் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், வேலூர், திருவண்ணாமலை, […]
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்வி குறியாகியுள்ளது என கேப்டன் விஜயகாந்த் அறிக்கை. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோவை, மதுரை, தூத்துக்குடி திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக பிரமுகா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு மற்றும் டீசல் பாக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு […]
பல்வேறு வளர்ச்சிக்கு மற்றும் தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே வழங்கி உள்ளது என ஜே.பி.நட்டா குற்றசாட்டு. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில், அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த நிலையில், அவர் மதுரையில் நடந்து வரும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய அவர், ரூ. 392 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும், மல்லிக்கு புவிசார் குறியீடு கொடுத்து மதுரையின் […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு தொகை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய பி அணிக்கும், பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய ஏ அணிக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் விளையாட்டு தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது. போட்டிகளை உலகமே […]
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் மூலம், தகுதியற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது எனஉயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவுறுத்தல். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா, தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் […]
அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் முழு நேரமும் முறையாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் முழு நேரமும் முறையாக முக கவசம் […]
உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது நேரடி வாரிசுதாரருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது நேரடி வாரிசுதாரருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘”உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரது குடும்பம் வறுமையில் வாடாமல் இருப்பதற்கு, அக்குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்”. […]
குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களின் குறைபாடுகள் பற்றி 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தரமற்ற குடிநீர் அருந்துவதால் காலரா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியின் போது தரத்தை ஆய்வு செய்த பின்புதான் கேன்களில் அடைத்து குடிநீரை […]
யூ-ட்யூபை பார்த்து கணவரே செய்வதற்கு அது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல. மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் வசிக்கும் லோகநாதன் என்பவர் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 1 வருடத்திற்கு முன்பு கோமதி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அவர் மனைவி கர்ப்பமான நிலையில், அவரது மனைவிக்கு கடந்த டிச.13 ஆம் தேதி குழந்தை பிறப்புக்கான டெலிவரி […]
வேலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவல் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோன பரவுவதால், கண்டிப்பாக அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. டீக்கடை, ஹோட்டல், வங்கிகள், […]
முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் 2,200 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் 4 வழிசாலைகளாக மாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 6,700 கி.மீ நீளமுள்ள சாலைகள் இரண்டு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு அகலப்படுத்தப்படும். போக்குவரத்து நெரிசல் சாலைகள் தேர்வு செய்யப்பட்டு அகலப்படுத்தப்படும். நிலம் கையகப்படுத்துதல், மரம்வெட்டும் பணிகள் […]
தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாத ஆசிரியர்கள் பிறர் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் நல்லது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, மாணவர்கள் நலன்கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம். தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாத ஆசிரியர்கள் பிறர் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் நல்லது. 2 தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், பிற்காலத்தில் மாற்று […]
களிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், சாதனை படைத்த மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகளுக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் உறுதி. தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் சமூக வலைதளங்களில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட அரசின் எந்த […]
தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை அமைச்சர் ராஜிவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு இன்று மதியம் சென்னை வருகின்றன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் மழையால் பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆறுகள், குளங்கள், ஏரிகள் அணைகள் நிரம்பியதால் அதன்மூலம் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த […]
2022 – 23 கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் 10 அரசு மற்றும் கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2022 – 23 கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் 10 அரசு மற்றும் கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சரி அவர்களால் 13.08.2021 அன்று 2021-22-ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை சட்டமன்றக் […]
மக்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப (ரேசன்) அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் பச்சரிசி, முந்திரி திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, இத்தொகுப்பில்,பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி வெல்லம், முந்திரி,திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, […]