மத்திய அரசின் இந்தி திணிப்பு என்று கூறுவது வாக்கு வங்கியின் அரசியலுக்காகவே என ஜி.கே.வாசன் ட்வீட். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தந்த வாக்குறுதி நினைவில் இருக்காதா? உங்கள் இந்தி வெறி தணியாதா? என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித் தொகை திட்டம் பயன் பெறுவதற்கான தகுதித் தேர்வு 11.09.2022 அன்று நடைபெறவுள்ளது. இது 9 வது வகுப்பு 11 வது வகுப்பு பயிலும் இதர பிற்பட்டோர், கல்வி ரீதியாக பிற்பட்டோர், சீர் மரபினர் மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டம் ஆகும். இந்த தேர்வுக்கான கேள்வித் தாள்களும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே […]
இலங்கை தேசிய கீதத்திலிருந்து தமிழை விலக்கியிருப்பது கண்டனத்துக்கு உரியது என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட். இலங்கை தேசிய கீதத்திலிருந்து தமிழை விலக்கியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து ஆசிரியர் கே.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில் மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் பரிதவிக்கும் நிலையில், ஈழத் தமிழர்களுக்கு இலங்கை சிங்கள இனவாத அரசால் ஏற்பட்ட இன அழிவை (Genocide) எல்லாம் மறந்து தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் […]
தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான கால அட்டவணையில் மூன்றாவதாக விருப்பமொழி என்ற தேர்வு கொடுக்கப்பட்டது. இது எதற்காக கொடுக்கப்பட்டது என்றால், தமிழை தாய்மொழியாக கொள்ளாத மாணவர்களுக்காக தான் இந்த விருப்பமொழி தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், தமிழகத்தில் இருமொழிக்கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும். தாயமொழி […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தி மொழி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி மொழியை ஆங்கில மொழிக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டுமெனவும், இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் வாதிகள் மற்றும் நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற தேசிய கூட்டமைப்பின் தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசைப்புயல் ஏ […]
ஆங்கிலமே திணற அடிக்கும் போது அறவே புரியாத மொழியை எல்லாம் திணிப்பதை கைவிடுங்கள் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவில் சம்ஸ்கிருத வார்த்தை இருப்பதாகவும், ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா? என்றும் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘ ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், லோயர் பெர்த்/ சீனியர் […]
தமிழை பயிற்று மொழியாக்க கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழைப் பயிற்று மொழியாக்க உத்தரவிடக் கோரி பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று தாய்மொழி தினத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக தாய் மொழி தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.உலக தாய்மொழி தினமாக முதன்முறையாக 1999-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் கொண்டு வரப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த தினம் மூலம் தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது யுனெஸ்கோ. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது கருத்துகள் இந்த தினத்தில் முன்வைக்கப்படும். ‘வீழ்வது நாமாக இருப்பினும் […]
மகாகவி பாரதியாரின் 137வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் இலக்கியவாதி, தமிழாசிரியர், விடுதலை போராட்டவீரர், பத்திரிக்கையாளர் என தமிழுக்கும் தாய் நாட்டிற்கும் பலவகையில் சேவையாற்றியுள்ளார். 1882 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி – இலக்குமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் சுப்பிரமணியன். 1897ஆம் ஆண்டு செல்லம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இளம் வயதிலேயே கவிபாடும் திறன் பெற்றிருந்தார். தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் பல தமிழ் கவிதைகள், இலக்கியங்கள் என பல படைப்புகளை எழுதியுள்ளார். எட்டப்ப நாயக்கர் […]
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவான படம் விஸ்வாசம்.இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.கடந்த மாதம் பொங்கலை முன்னிட்டு படம் வெளியாகி வசூலில் பல சாதனைகள் செய்து வருகிறது.படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு சிறந்த வரவேற்பு பெற்று வருகிறது.இந்நிலையில் தான் விஸ்வாசம் படம் வெளியாகி 30 நாள்கள் ஆகி உள்ளது இதை கொண்டாடும் விதமாக பொள்ளாச்சியில் உள்ள ஒரு திரையரங்கில் பெண்கள் மட்டும் பார்க்க சிறப்பு ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது.அந்த ஷோ பார்க்க வந்த பெண் […]
தமிழ் : அவமானம் அல்ல அடையாளம்..! ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது !!! ஆதாரம் இதோ… W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி. எடுத்துகாட்டுகள் : Cry – ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது. கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர். Clay – களி (களிமண்) […]
ஐநாவில் இந்தியை அலுவலக மொழியாக்குவது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ், அதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை விவரித்தார். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், 22 நாடுகளில் பேசப்படும் அரபி மொழியே ஐநாவில் அலுவல் மொழியாக ஆக்கப்படாத நிலையில், இந்தியாவில் மட்டுமே பேசப்படும் இந்தியை ஆக்க முயற்சிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தையோ, மேற்கு வங்கத்தையோ சேர்ந்த ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சராகவோ, பிரதமராகவோ பதவியேற்கும் நிலையில், அவரும் ஐநாவில் […]