நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் வாயிலாக நலத்திட்டங்களின் செறிவூட்டலை அடைவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் பாகூர் கிழக்கு பஞ்சாயத்தில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, புதுச்சேரி முதல்வர் மக்களுக்கு என்ன திட்டம் கொண்டுவர நினைக்கிறாரோ, அவை அனைத்துக்கும் நான் ஒப்புதல் அளிக்கிறேன். பிரதமர் […]
பல்கலைக்கழக வேந்தர்கள் பொறுப்பில் முதலமைச்சர் இருந்தால் முழுவதும் அரசியல் சாயம் பூசப்படும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார். அதாவது, ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பாடகி பி.சுசீலா மற்றும் பி.எம்.சுந்தரம் ஆகிய இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்கி கவுரவித்தார். இதன்பின் முதல்வர் ஸ்டாலின் […]
புதிய கல்வி கொள்கை தாய் மொழியை ஆதரிக்கிறது. மாணவர்களுக்கு தேவைப்பட்டால் அடுத்த மொழியை கற்க போகிறார்கள். – தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். அவர் பேசுகையில், புதிய கல்வி கொள்கை பற்றி பேசியிருந்தார். புதிய கல்வி கொள்கை தாய் மொழியை ஆதரிக்கிறது. மாணவர்களுக்கு தேவைப்பட்டால் அடுத்த மொழியை கற்க போகிறார்கள். இதில் அரசியல் செய்யாதீர்கள். இன்னோர் மொழியை […]
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு அலுவல் மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் அலுவல் மொழியாக இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி […]
இன்று அம்பேத்காரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், அம்பேத்காரின் பிறந்த நாளான இன்று அவரது கொள்கை மற்றும் புகழை பரப்புவதுடன் மட்டுமல்லாமல், அம்பேத்கார் கனவு கண்ட சமத்துவ சமுதாயத்தை உருவாக்க சபதம் ஏற்போம் என கூறியுள்ளார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் மற்றும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகிய இருவரும் நீண்ட மாதங்களாக ஒருவரையொருவர் சந்தித்து கொள்வதில்லை எனவும் ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் தெலுங்கானா முதல்வர் கலந்துகொள்ளவதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியிலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவும் டெல்லியில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் தினவிழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பெண்கள் பொது வெளியில் நாகரீகமான உடைகளை அணிவது அவசியம். உடைகளில் கட்டுபாடு இருக்க வேண்டும். கண்டபடி மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பெண்கள் உடை அணியக் கூடாது. பெண்கள் நாகரிக உடைகள் உடுத்துவதில் கவனம் தேவை. பெண்ணுரிமையை தவறாக பயன்படுத்துகிறோம். கண்டமேனிக்கு உடை உடுத்துவது தான் பெண்ணுரிமை என நினைக்கிறார்கள். நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் உள்ளது. உடையில் ஒரு கட்டுபாடு இருக்க […]