South Chennai : தென்சென்னையில் தமிழிசை போட்டியிடுவதை கிண்டல் செய்த அமைச்சர் துரைமுருகன். தமிழகத்தில் தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுக்கிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தராஜன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். கடந்த 2019 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் தான் வெற்றி பெற்று இருந்தார். கடந்த மக்களவை தேர்தலில் , தூத்துக்குடி தொகுதியில் […]
Election2024 : தேர்தலில் தமிழிசை போட்டியிடுகிறார். ஆனால், நிர்மலா சீதாராமன் போட்டியிடவில்லை ஏன் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். தமிழகத்தில் பாஜக இந்த முறை அதிமுக கூட்டணியை தவிர்த்து, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்கிறது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தமிழிசை சௌந்தர்ராஜன் தென் சென்னைலும், எல்.முருகன் நீலகிரி தொகுதியிலும், நயினார் நாகேந்திரன் நெல்லையிலும் போட்டுயிடுகின்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா […]
சமூகவளர்ச்சி குறியீடுகளில் புதுச்சேரி முதலிடம் வகிப்பதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சமுதாய வளர்ச்சி குறியீடுகளில் புதுச்சேரி 100-க்கு 65.99% பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளதாகவும், வீட்டு வசதி, குடிநீர் மேலாண்மை, துப்புரவு போன்றவற்றில் முதலிடம் பிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தில் நிலவும் சிறு சிறு பிரச்சனை போன்றவற்றை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என தமிழிசை பேச்சு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் மக்களுக்கு எதுவும் செய்து தர முடியவில்லை. அதிகாரம் இல்லாததால் தினமும் மன உளைச்சல் தான் ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார். இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், ‘நான் யாரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கவில்லை. யாரையும் மன உளைச்சலில் இருக்க வைக்க கூடாது என்பதுதான் என்னுடைய கொள்கை. அண்ணன் ரங்கசாமியை ஏன் மன […]
புதுச்சேரியில் எந்த அடக்குமுறையும் இல்லை துணை நிலை ஆளுநர் என்ற முறையில் அரசுக்கு துணையாக இருக்கின்றேன் என தமிழிசை பேட்டி. திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் நல்ல ஆட்சி நடந்து கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு இப்போது தேவை […]
ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது என தமிழிசை ட்வீட். சமீப காலமாகவே ஆளுநருக்கு, திமுகவிற்கு இடையே மோதல் போக்கு நிகழ்ந்து வரும் நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு திமுக கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன்படி, ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி சென்றார். இந்த நிலையில், இதுகுறித்து […]
புதுச்சேரி காலாபட்டு மத்திய சிறையில் ஆய்வுசெய்த ஆளுநர் தமிழிசை காலில் விழுந்து கெஞ்சிய கைதிகள். புதுச்சேரி காலாபட்டு மத்திய சிறையில் ஆளுநர் தமிழிசை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சிறை கைதிகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் சிறையில் இருப்பதாகவும், விடுதலை செய்யுங்கள் எனக் கூறியும் காலில் விழுந்து கெஞ்சி உள்ளனர். இதனையடுத்து ஆளுநர் தமிழிசை, கோரிக்கையை ஆலோசிப்பதாக உறுதி கொடுத்தார். தமிழிசை காலில் விழுந்த கைதிகளை போலீசார் தூக்கி விட்டனர்.
எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராக வாய்ப்பு வந்தது ,ஆனால் மக்களோடு மக்களாகத்தான் இருப்பேன் என்று கூறிவிட்டேன் என தமிழிசை பேச்சு. தெலுங்கானா ஆளுநராக பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றது முன்னிட்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எனது அப்பா ஒரு தேசிய கட்சித் தலைவர் , அதற்கு நேர்மாறான தேசியக் கட்சியில் நான் தலைவராக இருந்தது தமிழகத்திற்கு செய்த மிகப்பெரும் கடமையாக நினைக்கிறேன். எப்போதும் இயல்பாக […]
ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமமான காரியம்தான் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கூறுகையில்,ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமமான காரியம்தான். இத்தகைய சூழலில் கனிமொழி பதவிக்கு வந்துள்ளார்.’வாரிசு அரசியல்’ என்று அடையாளமாகிப் போய்விடுமோ என சந்தேகம் வருகிறது. காரணம் தலைவர் அண்ணன், துணைப் பொதுச் செயலாளர் தங்கை. […]
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. புதுசேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது முதலமைச்சராக ரங்கசாமி பதவியில் இருக்கிறார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தராஜன் பதவியில் இருக்கிறார். இவர் அண்மையில், புதுச்சேரி ஆளுநர் சார்பாக, முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் எனவும் , அதன் மூலம் மக்கள் குறைகள் கேட்டறிந்து […]
தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செய்வதில் என்ன தவறு? என ஆளுநர் தமிழிசை கேள்வி. வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உள்ளனர். இதற்கு திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்எஸ்எஸ் சகோதரர்களுக்கும் மற்றவர்களை போல் உரிமை உள்ளது. அனைவரும் சமம் என்று சொல்லும் போது […]
ஆளுநரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் உரிமை உள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். ஆளுநரை சந்தித்த பின் பேட்டியளித்த ரஜினிகாந்த், ஆளுநரிடம் அரசியல் பேசியதாகவும், ஆனால் அதுபற்றி தற்போது பேச இயலாது என்றும் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்தின் பேச்சிற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட பின் புதுச்சேரி துணைநிலை […]
விமானத்தில் நடுவானில் பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட, முதலுதவி சிகிச்சை அளித்த தமிழிசை சௌந்தரராஜன். தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று காலை 3 மணியளவில் டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது நடுவானில் சென்று கொண்டிருந்த நிலையில், சக பயணி ஒருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அப்போது யாராவது மருத்துவர் இருக்கிறீர்களா என்று விமான பணிப்பெண் அறிவிப்பு விடுத்துள்ளார். அப்போது தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், விசாரித்து […]
தெலுங்கானா ஆளுநருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஈபிஎஸ் ட்வீட். தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘மேதகு தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர்(கூடுதல் பொறுப்பு) டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், […]
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அளிக்கும் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்துள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்தனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அளிக்கும் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ் கட்சிகள் […]
தமிழ்நாட்டைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு. தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்தனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, தவக உள்ளிட்ட கட்சிகள் நிராகரித்தது. நீட் மசோதாவை […]
பிரதமர் மோடி அவர்கள், புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்க உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் 12-ஆம் தேதி, பாஜக சார்பில் மதுரையில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். தமிழகம் வரும் பிரதமர், புதுச்சேரிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கூறுகையில், ஜன.12-ஆம் தேதி தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி அவர்கள், புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் தின […]
ஆரோவில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டது என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ஆரோவில் பண்பாட்டு நகரத்தில் கிரவுண் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அப்பகுதியில் வாழக்கூடிய மக்களின் எதிர்ப்பை மீறி 500க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கடந்த ஐந்தாம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, ஆரோவில் பகுதியில் எந்த காரணத்தைக் கொண்டும் இயற்கை வளங்கள் அழிக்கப்படாது […]
தெலுங்கானாவில் ராஜபவனில் பதுக்கம்மா மலர் திருவிழாவின் 2-வது நாளான நேற்று, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பெண்களுடன் இணைந்து நடனம் ஆடி உள்ளார். தெலுங்கானாவில் பதுக்ம் மா என்ற திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழா என்பது பெண்கள் அனைவரும் கொண்டாடக்கூடிய மலர் திருவிழா ஆகும். இத்திருவிழா நவராத்திரி சமயத்தில் தெலுங்கானாவில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் கூடியதாகும். இந்த நாட்களில் தெலுங்கானா பெண்கள் வீட்டையும் தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து கடவுளை வழிபடுவது உண்டு. இந்த நிகழ்வின் […]
தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள் ,கட்சிகளின் நிலைப்பாடுகளையும் ,கருத்துக்களையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு மிகவும் பயனலிப்பைதாக உள்ளது.ஆனால் சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும் ,சமவாய்ப்பும் இல்லாதால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.