தமிழகத்தில் செயல்படும் கருத்தரிப்பு மையங்கள் கருமுட்டை சேமிப்புக்கு 50,000 ரூபாயும், கருமுட்டையை செலுத்த 50,000 ரூபாயும், வாடகை தாய் பதிவு கட்டணமாக 2 லட்சம் ரூபாயை பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் போலியான கருத்தரிப்பு மையங்களை கண்டறிய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, புதிய பதிவு கட்டணங்களை செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, தமிழகத்தில் செயல்படும் அனைத்து செயற்கை கருத்தரிப்பு […]
கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. இந்நிலையில்,குரங்கு அம்மை பாதிப்புகள் பரவியுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க […]
தமிழ்நாடு சுகாதாரத் துறை திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்திய மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சுகாதாரத்துறை விருதை அறிவித்துள்ளது. அதன்படி, 2016 முதல் 2021- ஆம் ஆண்டு வரையிலான விருதுகளை தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சிறந்த ஆட்சியாளர்களுக்கான விருது பெற்றோர் விபரம் பின்வருமாறு, 2016-17 – விருதுநகர் ஆட்சியர் சிவஞானம் 2017-18 – திருவாரூர் ஆட்சியர் நிர்மல்ராஜ் 2018 -19 -சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன் 2019-20-விருதுநகர் ஆட்சியர் சிவஞானம் 2020-21-திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.