தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில், போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.அதன்படி,வினாக்களின் நேரத்தின்போது எதிர்க்கட்சி சட்டமன்றஉறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் ஆகியோர் பதில் அளித்து புதிய அறிவுப்புகளை அறிவிப்பார்கள். மேலும்,சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை வாங்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில்,அதற்கான அறிவுப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம்,உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுற்றுலாக் கொள்கைகளை […]
மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத்துறைக்கு மூடு விழா வரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் மத்திய அரசு தனியார் மயமாக்குகின்றன. மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத்துறைக்கு மூடு விழா வரும் என்றும், சமையல் எரிவாயு விலை குறைவதற்கு வாய்ப்பே […]