நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வருவதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் இரு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த […]