தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளத்தை கையாள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது என்று பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது. […]
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் தூண்களாக இருக்கும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தமிழக அரசு […]
மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் துவங்கிட அனுமதி அளித்தும், நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களால் “முஸ்லிம் மற்றும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்களின் நிதி ஆதாரங்களின் மூலம் ஆதரவற்ற, வயதான முஸ்லிம் விதவைகள் மற்றும் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் முஸ்லிம் மற்றும் கிறித்துவ மகளிர் ஆகியோருக்கு உதவிடும் […]
தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாணியாக விளங்கும் டீசலின் விலை லிட்டருக்கு 100 ரூபாயையும் தாண்டி உயர்ந்து கொண்டே போவதைச் சுட்டிக்காட்டி, இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், இதர […]
பஞ்சாயத்து தலைவர்களின் மாத ஊதியம் ரூ.10,00ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படுகிறது என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், ஊராட்சி மன்ற தலைவர்களின் மாத ஊதியம் ரூ.10,00ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படுகிறது என்று அறிவித்துள்ளார். ஊதிய உயர்வு மூலம் தமிழக்தில் 12,000க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் என்றும் சிறப்பாக […]
மகப்பேறு பேறுகால விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பணியில் உள்ளர்வர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 1980-ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை, கடந்த 2011-ஆம் ஆண்டில் 6 மாதங்களாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார். இதன்பின் 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்று 2016-ஆம் ஆண்டில் அவர் சட்டப்பேரவை விதி 110 கீழ் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து இந்த […]