TNSchools: தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தவேண்டும் என்றும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனைத்து வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொறுத்தப்பட்டிருக்க வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்தி, காட்சிகளை சேகரித்து காவல்துறையிடம் வழங்க வேண்டும். பள்ளி வாகன […]
அரசு பள்ளி என்பது வறுமை அடையலாம் அல்ல, பெருமை அடையாளம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியவர், தமிழக முதல்வர் கல்வி மருத்துவம் ஆகிய இரண்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மற்ற நாடுகள் நம்மை பார்த்து பயப்படுகிறார்கள். நம்மிடம் உள்ள ஆயுதத்தை பார்த்து அல்ல. நம்மிடம் உள்ள இளைய சமுதாயத்தை பார்த்து தான். […]
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி மாணவியின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 3 நிர்வாகிகள், ஆசிரியைகள் 2 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்ய கோரி மாணவியின் […]
தனியார் பள்ளிகளில் பயிலும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வரும் நிலையில், இந்த தோற்றால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா தொற்றால் பல மாணவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த நிலையில், தனியார் பள்ளிகளில் பயிலும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்து, அவர்கள் தொடர்ந்து அதே பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்திட […]
கர்நாடகாவின் கிளாரன்ஸ் தனியார் பள்ளியில், மாணவர்கள் பைபிள் கொண்டுவர பெற்றோரிடம் அனுமதி கடிதம் கேட்கப்பட்டது தற்போது புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி தடைசெய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் கர்நாடகாவின் கிளாரன்ஸ் என்ற தனியார் பள்ளியில், மாணவர்கள் பைபிள் கொண்டுவர பெற்றோரிடம் அனுமதி கடிதம் கேட்கப்பட்டது தற்போது புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்த பள்ளியில் […]
தனியார் பள்ளிகளில் கட்டமின்றி எல்.கே.ஜி வகுப்புகளில் சேர்வதற்கு 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் அரசு ஒதுக்கிய 25 சதவீத இடங்களில் எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஸ். இதன் மூலமாக சேரக்கூடிய மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்க முடியும். இந்நிலையில் தற்பொழுதும் தனியார் பள்ளியில் எல்கேஜி வகுப்புகளில் இலவசமாக […]
பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின் சிறுவன் தீக்சித் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில், ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2-ம் வகுப்பு மாணவர் சிக்கி பலியானார். மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பள்ளியின் நிர்வாகிகளிடம் துணை காவல் ஆணையர் மீனா விசாரணை நடத்திய நிலையில், தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி வேன் […]