தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் சட்டத்தை வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஓசூர் அருகே அமைக்கப்பட்டு வரும் டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வெளிமாநிலத்தவருக்கு குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தவருக்கு அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இது குறித்த […]
சென்னையில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இன்று சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளனர். இந்த முகாம் சென்னை – 32 கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. காலை 10.00 மணி முதல் 2.00 மதியம் மணி வரை இந்த முகாம் நடைபெற […]
குஜராத் மாநிலம் சூரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வாயு கசிவு ஏற்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழப்பு. குஜராத் மாநிலம் சூரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு கசிவால் அங்கு பணிபுரிந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, வாயு கசிவால் உடல்நலகுறைவு ஏற்பட்ட 20 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.