தோல்வி தான் நமக்கு பாடங்களை கற்று தரும். தோல்வியால் மாணவர்கள் மனம் தளரக் கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு சென்னை வேலப்பன்சாவடியில், தனியார் கல்லூரி பட்டமளிப்புவிழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வர சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தோல்வி தான் நமக்கு பாடங்களை கற்று தரும். தோல்வியால் மாணவர்கள் மனம் தளரக் கூடாது. அடுத்த 25 ஆண்டுகளில் எரிசக்தியை இந்தியா தன்னிறைவு பெறும் என தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரலானதையடுத்து 6 பேர் சஸ்பெண்ட். காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த கல்லூரியை சேர்ந்த மாணவிகள் குளிர்பானத்தில், சாராயத்தை கலந்து அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்த வீடியோ அக்கல்லூரி முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. […]