கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துவதற்காக மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் போது பாதுகாவலர் ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சயான், மனோஜ், கனகராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றச்சாட்டப்பட்ட […]