தமிழ்கடவுளான எம்மிரான் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற நவ.8-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது.7 நாட்கள் விரதத்தோடு நடக்கும் இந்த திருவிழாவின் போது, தினசரி சின்னக்குமாரர் சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானைக்கு தயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.6-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் புரியும் அப்பன் முருகனின் […]
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழா காலங்கள் என்றில்லாமல் ஆண்டு முழுவதும் பழனி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். அதிலும் விடுமுறை தினங்களில் வழக்கத்தைவிட இருமடங்கு பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள். அந்த வகையில் விடுமுறை தினம் மற்றும் வைகாசி விசாக திருவிழா திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றதையொட்டி நேற்று மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே கோவிலுக்கு […]