பிரதமர் மோடி வந்தால் தான் தடுப்பூசி போடுவேன் என பிடிவாதம் பிடித்த கிராமவாசி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம், தார் மாவட்டத்தில் கிக்காவாஸ் பழங்குடியின கிராமத்திற்கு சுகாதார அதிகாரிகள் அம்மக்களுக்கு தடுப்பூசி செல்லுவதற்காக நேற்று சென்றனர். […]