தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை , ஒரத்தநாடு அருகே தெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகள் ஐஸ்வர்யாவும் (வயது 19) , பக்கத்து ஊரான பூவாலூரை சேர்ந்த நவீன் (வயது 19) என்பவரும் திருபூரில் ஒன்றாக வேலை செய்து வந்தபோது காதலித்து வந்துள்ளனர். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளனர். 36 மணி நேரத்திற்கு முன்… ரத்தக்கறை..! 4 வயது சிறுவன் மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள்.! இதனை அறிந்து ஐஸ்வர்யா பெற்றோர்கள் ஜனவரி 2ஆம் […]
திருவையாற்றில் அரசு மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பேருந்து ஓட்டுநர் உட்பட காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பேருந்து விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் மீது ஜேசிபி இயந்திரம் களமிறக்கப்ட்டு விளைநிலங்கள் மூடப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புறவழிசாலைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, நிலங்களை அரசு கையகப்படுத்துவது வழக்கமான ஒன்று. அப்படி கையகப்படுத்துவதில் விலை நிலங்களும் அடங்கும். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது தஞ்சாவூரில் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் பகுதியில் விலை நிலங்களில் நடவு செய்யப்பட்டு இருந்தது. நடவு செய்து 60 நாட்களே ஆன நிலையில் தற்போது […]
ராஜராஜ சோழனின் 1036 வது சதய விழாவை முன்னிட்டு நாளை தஞ்சாவூரில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை. சோழ அரசர்களின் பெரும் புகழுக்குச் சொந்தக்காரரும்,மிகச் சிறந்த அரசர்களில் ஒருவருமான ராஜராஜசோழன் அவர்கள்,தஞ்சை பெரிய கோவில் என்னும் பேரதிசயத்தை கட்டினார்.இதன்மூலம்,ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அவரது சிறப்பு ஓங்கி நிற்கிறது.இதன்காரணமாக, உலக அளவில் புகழ் மிக்கவராக மாறியுள்ளார்.இவரின் பிறந்த நாள் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,ராஜராஜசோழனின் 1036 வது சதய விழாவை முன்னிட்டு நாளை தஞ்சாவூரில் […]
பிப்.,5 தேதி குடமுழுக்கு காண உள்ள தஞ்சை பெரியக்கோவில் பிப்ரவரி 4 முதல் 6 வரை சிறப்பு இரயிலை இயக்க உள்ளதாக தெற்குஇரயில்வே அறிவித்துள்ளது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தற்போது நடைபெற உள்ளது.அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 5 ந் தேதி கோலகலமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. குடமுழுக்கு பணிகளானது பூர்வாங்க பூஜைகளுடன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நேற்று குடமுழுக்கு விழாவில் காவிரி புனிதநீரானது யானை மீது வைத்து ஊர்வலமாக […]
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்து வந்தவர் வனிதா. இவரது கணவர் இறந்துவிட்டார். 3 குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இவர் தனது சகோதரியின் மகனான பிரகாஷிடம் 2 லட்சம் ரூபாய் வாங்கியதாக தெரிகிறது. அதில் 1.5 லட்சத்தை வனிதா திருப்பிக்கொடுத்த நிலையில், மீதம் 50 ஆயிரம் ரூபாயை வனிதா பிரகாஷிடம் கொடுக்க வில்லை என கூறப்படுகிறது. அது குறித்து போலீசில் பிரகாஷ், வனிதாமீது புகார் கொடுத்துள்ளார். இந்த பண பிரச்சனை தொடர்பாக, பிரகாஷ், அவரது நண்பர் சூர்யா, […]
தஞ்சாவூரை அடுத்து வல்லம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி மஞ்சுளா.மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு செல்லும் போது நேற்று முன்தினம் திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஆசிரியர்கள் அந்த மாணவியை அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த தகவல் வல்லம் அனைத்து மகளீர் காவல் […]
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டது செல்லும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக பாலகிருஷ்ணனை நியமிக்க ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்து கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இது குறித்து விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் அரசு தரப்பில் அனைத்து தகுதிகளையும் ஆராய்ந்த பிறகே பல்கலைக்கழக வேந்தர் இந்த நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார் என கூறியது இதனால் இந்த நியமனத்துக்கு எதிரான மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து […]
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலம் 58 ஏக்கரை மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகே சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட 58 புள்ளி ஒன்று ஏழு ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது. நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். DINASUVADU
சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும், காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் பரத நாட்டியம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இன்று அதிகாலை 4 மணி யளவில் பெரிய கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத் பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாக முத்துமணி அலங்கார சப்பரத் தில் புறப்பட்டு தேர் […]
தஞ்சையில் காஞ்சிசங்கர மடத்திற்கு சொந்தமான கோவில் உண்டியலை மர்மநபர் ஒருவர் தூக்கிச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. தஞ்சை மேலவீதியில் பங்காரு காமாட்சியம்மன் கோவில் உள்ளது, காஞ்சி சங்கரமடத்திற்கு சொந்தமான இந்த கோவிலை இன்று காலையில் திறந்த போது உண்டியல் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்த போது, நள்ளிரவு 12.30 மணியளவில் லுங்கி சட்டை அணிந்த நபர் ஒருவர், கோவிலுக்குள் வந்து உண்டியலை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும் செய்திகளுக்கு […]
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த கல்யாணபுரம் சீனிவாச பெருமாள் கோவிலில் 300ஆவது ஆண்டு பிரம்மோற்சவ கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.கல்யாணபுரம் சீனிவாச பெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சி, கடந்த மாதம் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நேற்று மாலை நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையேற்றுத் துவக்கிவைத்த நிகழ்ச்சியில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த […]
சரபோஜி கல்லூரி விளையாட்டு மைதானத்தை ஆக்கரமித்து எடப்பாடி தஞ்சை வருகையால் அந்த மைதானத்தில் ரோடு போடும் பணியையை தடுக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டமானது நடைபெற்றது வருகிறது.இப்போராட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார்.
தஞ்சாவூர் அருகே நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும் தனியார் பேருந்து நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இத்த விபத்தில், இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்ட பயணிகள்படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர்;தமிழகத்தின் மிகச்சிறந்த மாமன்னர் என்று போற்றப்படும் ராஜராஜ சோழரின் 1032-வது ஆண்டு சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் பல அரசியல்தலைவர்கள்,பொதுமக்களும் ராஜராஜ சோழரின் சிலைக்கு மரியாதை செய்தார்.இவர் தஞ்சை பெரியக்கோவிலை கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் தஞ்சை பெரிய கோவிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.