சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.அதன்படி,நாட்டு தக்காளி ஒரு கிலோ ரூ.42-க்கு விற்கப்படுகிறது.மேலும்,பெங்களூரு தக்காளி கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ரூ.35-க்கு விற்கப்பட்ட தக்காளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதே சமயம்,முட்டைகோஸ் ஆனது கிலோ ரூ.20-ரூ.25க்கும்,ஒரு கிலோ காலிபிளவர் ரூ.18-ரூ.20க்கும் ,உருளைக்கிழங்கு கிலோ ரூ.20 முதல் ரூ.26 வரை என கணிசமாக உயர்ந்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் காய்கறிகளின் வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பால் […]
கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சமீப நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை […]
தமிழகத்தில் சென்னை,மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தக்காளி விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் செடியில் உள்ள தக்காளி அழுக தொடங்கி உற்பத்தி குறைந்துள்ளது.மேலும்,வெளியூர் வரத்தும் குறைந்துள்ளது. இந்நிலையில்,தமிழகம் முழுவதும் தக்காளி விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி,சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடந்த வாரம் 1 கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டு வந்த தக்காளி விலை தற்போது இரு மடங்காக உயர்ந்துள்ளது. […]