கடந்த, 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு மீது, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. இதில், பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 எம்.எல்.ஏ.,க்களும், அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. அரசுக்கு எதிராக ஓட்டளித்த, எம்.எல்.ஏ.,க்கள் மீது, சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஒபிஎஸ் தலைமையிலான அணியினரும்,இபிஎஸ் தலைமையிலான அணியினரும் மீண்டும் ஒன்றிணைந்து, ஒரே அ.தி.மு.க.,வாக செயல்பட்டனர். […]